பிரித்தானியாவைத் தாக்கும் சண்ட்ரா புயல்: விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை
பிரித்தானியாவில் இந்த மாதத்தில் தாக்கும் மூன்றாவது பெரிய புயலாக 'சண்ட்ரா' (Chandra) உருவெடுத்துள்ளது.
ஏற்கனவே பிரித்தானியாவை தாக்கிய இரண்டு புயல்களைத் தொடர்ந்து, தற்போது சண்ட்ரா புயல் இன்று(27) பிரித்தானியாவை தாக்கப் போவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சி.வீ.கே .சிவஞானம்- சுமந்திரன் தமிழரசுக்கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டியவர்கள்! மறவன்புலவு சச்சிதானத்தன் காட்டம்
எச்சரிக்கை
இதன்காரணமாக, வட அயர்லாந்தின் கிழக்கு பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணிக்கு 120 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் பாரிய அலைகள் எழுந்து வீதிகளுக்குள் புகுந்த அதிக சேதங்களை ஏற்படுத்தலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தென்மேற்கு இங்கிலாந்து பகுதிக்கு திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் ஏற்படும் அபாயம்
இங்கு 30-50 மி.மீ மழையும், உயர்ந்த பகுதிகளில் 80 மி.மீ வரையும் மழை பெய்யக்கூடும்.

ஏற்கனவே நிலம் அதிக ஈரப்பதத்துடன் உள்ளதால், உடனடியாக வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளது. மத்திய மற்றும் வடக்கு இங்கிலாந்தின் மலைப்பகுதிகள் மற்றும் ஸ்கொட்லாந்தில் பலத்த மழை பெய்யும் அதேவேளை, அது பனியாக மாறவும் வாய்ப்புள்ளது.
மலைப்பகுதிகளில் 5 செ.மீ முதல் 20 செ.மீ வரை பனிப்பொழிவு பதிவாகக்கூடும் என்பதால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படலாம் என எதிர்கூறப்பட்டுள்ளது.
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri