பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியா (United Kingdom)- வேல்ஸில் பெர்ட் (Bert) என பெயரிடப்பட்டுள்ள புயல் காரணமாக பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மின் வழங்கல் அமைப்பு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இதற்கமைய, மின்சாரம் மற்றும் எரிவாயு வழங்கல் அமைப்பான Direct Energy, பாண், சூப் முதலான டின்களில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள், கெட்டுப்போகாத குக்கீஸ் முதலான ஸ்நெக்ஸ் வகைகள், 'Cereal' வகை உணவுகள் மற்றும் உலர்ந்த பாஸ்தா மற்றும் சாஸ் உணவுகள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்களுக்கு அறிவுறுத்தல்
குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கான உணவு தண்ணீர், அத்தியாவசிய மருந்துகள், போர்வைகள், டார்ச் , பேட்டரிகள், சார்ஜர்கள் ஆகியவற்றையும் தயாராக வைத்துக்கொள்ளுமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நாட்டில் நீடித்த கனமழையை எதிர்பார்க்கலாம், தெற்கு வேல்ஸில் சில பகுதிகளில் 150 மிமீ மழை பெய்யக்கூடும், மேலும் 75 மிமீ இன்னும் பரவலாகப் பெய்யக்கூடும்.
மஞ்சள் வானிலை எச்சரிக்கை
நாட்டின் வடபகுதியில் சில மணிநேரங்களில் 100 முதல் 150 மிமீ வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செரிடிஜியன் (Ceredigion), கொன்வி (Conwy), க்வினெட் (Gwynedd), அங்க்லேசி (Anglesey) மற்றும் பெம்ப்ரோக்ஷயர் (Pembrokeshire) ஆகிய பகுதிகளில் 50 முதல் 60மைல் வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து பலத்த காற்று வீசக்கூடும்.
அத்தோடு, மேற்கு மற்றும் வடக்கு இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்தின் பல இடங்களுக்கு, உள்ளூர் நேரப்படி, சனிக்கிழமை காலை 4.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி வரை மஞ்சள் வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
