சர்வாதிகார வெறியை உடனடியாக நிறுத்துங்கள்-அனுரகுமார திஸாநாயக்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்ச அரசாங்கமும் முன்னெடுத்து வரும் ஜனநாயக விரோத அடக்குமுறை செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக தேடிய அறிய நேற்று மருதானை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
உள்ளே தள்ள வேண்டியவர்கள் வெளியில்
உள்ளே தள்ள வேண்டியவர்கள் வெளியில். வெளியில் இருக்க வேண்டியவர் உள்ளே இருக்கின்றனர்.இது மிகவும் அமைதியான ஆர்ப்பாட்டம்.எவரும் சீர்குலைக்கும் வகையில் நடந்துக்கொள்ளவில்லை.
ரணில் விக்ரமசிங்கவும் ராஜபக்சவினரும் நாட்டின் ஜனநாயகத்தை முழுமையாக குழித்தோண்டி புதைத்து அச்சத்தில் பதுங்குகுழிகளில் வாழும் தலைவர்களாக மாறவே திட்டங்களை வகுத்துள்ளனர்.
இதனால், மிக மோசமான, ஜனநாயக விரோத சர்வாதிகார வெறியை உடனடியாக நிறுத்துமாறு நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ராஜபக்ச அரசாங்கத்திற்கும் கூறுகிறோம்.
ஓடி ஒழிய இடங்களை தேடிக்கொள்ளுங்கள்
விக்ரமசிங்கவினர் இன்று இதனை தடுத்து நிறுத்தி இருக்கலாம். எதிர்காலத்தில் கொழும்புக்கு வரப்போகும் லட்சக்கணக்கானவர்களை தடுத்து நிறுத்த முடியாது. 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 5
பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வரும் இந்த தாக்குதல்களுக்கு எதிராக மக்களை அணித்திரட்டுவோம்.
இதனால், மக்களுக்கு அஞ்சி ஒழியும் இடங்களை தேடிக்கொள்ளுமாறு ரணிலுக்கும் தாக்குதல் நடத்துபவர்களுக்கும் நாங்கள் கூறுகிறோம். இதனால் உடனடியாக அடக்குதுறை நிறுத்துமாறு நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு கூறுகிறோம் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் ஷாலினி புதிய தொடரில் கமிட்டாகியுள்ளாரா? வைரலாகும் போட்டோ Cineulagam

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri

மாஸ் வரவேற்பு பெற்றுள்ள டிராகன் படத்திற்காக பிரதீப் வாங்கிய சம்பளம்... எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

விஜய் டிவியை தொடர்ந்து வேறொரு தொலைக்காட்சியின் சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ஷோபனா.. முழு விவரம் Cineulagam
