வடக்கு வைத்தியசாலைகள் மத்திக்கு செல்வதை உடன் தடுத்துநிறுத்துங்கள்- ஆளுநருக்கு அவைத் தலைவர் கடிதம்

Hospitals Northern province
By Rakesh Jun 21, 2021 01:47 AM GMT
Report

வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட பொது வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கான தீர்மானத்தை மீளாய்வுக்குட்படுத்தி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸுக்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்துக்குட்பட்ட மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சின் நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு செல்வதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக ஊடகச் செய்திகள் மூலம் அறியப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான எமது ஆட்சேபனையையும் அதிருப்தியையும் தெரிவிப்பதோடு இது மாகாண சபைகளுக்கு சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீறுவதாக அமைகிறது என்பதைப் பதிவு செய்துள்ள விரும்புகின்றேன். இந்த விடயத்தில் இந்த நாட்டின் அரசியலமைப்பின்படி மாகாண சபைகள் நியதிச் சட்டம் இயற்ற அதிகாரமளிக்கும் ஒன்பதாவது அட்டவணையின் நிரல் I இன் 11:1 பந்தியின் பின்வரும் ஏற்பாடுகளுக்கு தங்கள் அவதானத்தைக் கோர விரும்புகின்றேன்.

"(போதனா வைத்தியசாலைகளும் விசேட நோக்கங்களுக்காகத் தாபிக்கப்பட்ட மருத்துவமனைகளும் தவிர) பொது மருத்துவமனைகளையும் கிராம மருத்துவமனைகளையும் மகப்பேற்று மருத்துவமனைகளையும் மருந்தகங்களையும் தாபித்தலும் பேணுதலும்" இதன்படி போதனா வைத்தியசாலைகள் மற்றும் விசேட நோக்கங்களுக்கான வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய வைத்தியசாலைகள் யாவும் மாகாண சபைகளின் நிர்வாகத்திற்குட்பட்டவையாகும்.

இந்த ஏற்பாட்டின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரத்திற்கமைய வடக்கு மாகாண சபையானது அதனது 12.01.2016 ஆம் திகதி அமர்வில் நிறைவேற்றிய 2015ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க சுகாதார சேவைகள் நியதிச் சட்டம் 08.02.2016ஆம் திகதி ஆளுநரின் சம்மதம் கிடைக்கப் பெற்று சட்டமாக அமுலில் உள்ளது.

இந்த நியதிச் சட்டத்தின் பிரிவு 3 (அ) இன் கீழான அட்டவணை I இன்படி கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைகள் வட மாகாண சபையின் மாவட்ட பொது வைத்தியசாலைகளாக உள்ளடக்கப்பட்டுள்ளன.

யாழ்ப் பாணம் மாவட்டம் இதில் உள்ளடக்கப்படாத காரணம் இம்மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை ஏற்கனவே இயங்கி வந்தமையே இந்த நிலையில் மேற்குறிப்பிட்ட மாவட்ட பொது வைத்தியசாலை எதையும் மாகாண சபையிடமிருந்து மத்திய சுகாதார அமைச்சு கையேற்பது அரசமைப்புக்கும் மாகாண சபையின் நியதிச் சட்டத்திற்கும் முரணானதாகும். இந்த மாவட்ட வைத்தியசாலைகளின் சேவைகளிலும் வசதிகளிலும் குறைபாடுகள் காணப்படுவதாலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்படுவதாயின் அதற்கான தீர்வு இவைகளை மத்திய மயப்படுத்துவதல்ல.

அக்குறைபாடுகளை நீக்குவதற்கான நடவடிக்கை களை மாகாண நிர்வாகம் ஊடாக மேற்கொள்வதே பொருத்தமானதாகும். நிர்வாகம் மத்திய சுகாதார அமைச்சின் கீழோ அல்லது மாகாண சபை நிர்வாகத்தின் கீழோ இருந்தாலும் அநேகமாக அதே ஆளணியினரே செயற்படுவர் என்பது தெளிவு. ஏனெனில் வைத்தியத்துறை சார்ந்த சகல அதிகாரிகளும் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்படுவதுடன் அவர்களது ஒழுங்குக் கட்டுப்பாடும் அதனிடமே உள்ளது.

உண்மையாக இவ்வைத்தியசாலைகளுக்குத் தேவை உட்கட்டுமான மேம்படுத்தலும் பொருத்தமான நிபுணத்துவ வைத்தியர்களுமே. இவற்றை நிறைவேற்றுவதற்கான போதிய நிதியை மாகாண நிர்வாகத்திற்கு வழங்குவதன் மூலம் சகல குறை பாடுகளும் நிவர்த்திக்கப்படலாம் என்பதே எமது நிலைப்பாடாகும் என்பதை வலியுறுத்திக் கூற விரும்புகிறோம்.

மாகாண நிறைவேற்று அதிகாரியாகவுள்ள சிரேஷ்ட நிர்வாகியாகிய தாங்கள் இவற்றின் மேம்படுத்தலுக்கான நிதியை மாகாண சபை நிர்வாகத்திற்கு வழங்கினால் இனங்காணப்படும் குறைபாடுகளை நிர்வகிக்கும் ஆற்றல் தங்களுக்கு உண்டு என்பதை உயர்மட்டத்திற்குச் சுட்டிக்காட்டி இந்த முடிவை மீளாய்வுக்குட்படுத்தி நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தங்களை அன்புடன் வேண்டுகின்றேன்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US