போராட்டக்காரர்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்தவேண்டும்: ஜே.வி.பி வலியுறுத்தல்
அமைதியான போராட்டக்காரர்களை அடக்கி வேட்டையாடும் கோழைத்தனமான நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
கைது நடவடிக்கை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், போராட்டக்காரர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் ஆகஸ்ட் 09ஆம் திகதி ரணில் விக்ரமசிங்கவும் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விஜித ஹேரத்
இதேவேளை, மக்கள் எதிர்கொள்ளும் எரிபொருள், எரிவாயு, உரம் மற்றும் மருந்து பற்றாக்குறையை தீர்ப்பதன் மூலம் மட்டுமே போராட்டத்தை நிறுத்த முடியும் என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

"அடக்குமுறை அல்லது மிரட்டல் மூலம் போராட்டத்தை ஒருபோதும் நிறுத்த முடியாது.
அது அரசியல் நெருக்கடியை மோசமாக்கும், அரசியல் நெருக்கடி மோசமடைந்தால்,
பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளும் தாமதமாகும்" எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri