காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைது
கொழும்பு - காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுவரெலியா - களுகலை, பொனஸ்டா பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் 9ம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருட்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிராகவே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கு நுவரெலியா நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இதற்கமைய குறித்த சந்தேகநபரை கைதுசெய்வதற்கு அவரது வீட்டுக்கு சென்ற பொலிஸார், அங்கு மேலும் 4 பேர் மறைந்திருப்பதை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, அவர்களும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் பிங்கிரிய, கொதட்டுவ, களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள்
எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan