பொதுஜன பெரமுன பிரதேச சபை உறுப்பினர் வீட்டுக்கு கல்வீச்சு தாக்குதல்
கம்பஹா பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினரான அனுஜா ஷ்ரியந்தியின் வீடு மற்றும் கடை மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் வெலிவேரி, அம்பரலுவ பகுதியில் இன்று (13) அதிகாலை 1.00 மணியளவில் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது
பிரதேச சபை உறுப்பினரான அனுஜா, வெலிவேரி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர் ஒருவர் வீதியிலிருந்து கற்களை எடுத்து வளாகத்திற்குள் வீசுவது சிசிரிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.
குறித்த சந்தேகநபர் வீடு மற்றும் அதனுடன் இணைந்துள்ள கடை மீது மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்துவது சிசிரிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri