ஜப்பானிய தூதுவரின் மனைவி தங்கியிருந்த விருந்தகம் மீது கல்வீச்சு: பொலிஸ் பரிசோதகர் கைது
இலங்கைக்கான ஜப்பான் (Japan) தூதுவரின் மனைவி நேற்றிரவு தங்கியிருந்த புத்தலவில் உள்ள விருந்தகம் ஒன்றின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் மையத்தில் நடைபெறும் உத்தியோகபூர்வ வைபவமொன்றில் கலந்துகொண்ட பின்னர், அவர் குறித்த விருந்தகத்தில் தங்கியுள்ளார்.
இதன்போது, அடையாளம் தெரியாத நபரால் விருந்தகத்தின் ஜன்னல் மீது கற்கள் வீசப்பட்டுள்ளதால் விருந்தகம் சேதமடைந்துள்ளது.
சந்தேகநபர்
இந்நிலையில், தூதுவரின் மனைவியான மரிகோ மிசுகோஷி, சம்பவம் குறித்து விருந்தக உரிமையாளருக்கு
எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்ததையடுத்து, விருந்தக நிர்வாகம் புத்தல பொலிஸ் நிலையத்தில் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

அதனையடுத்து, விருந்தகத்துக்கு அண்மையில் வசிக்கும் முன்னாள் பொலிஸ் அதிகாரியான
ரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், சம்பவத்தின் போது சந்தேகநபர் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam