முல்லைத்தீவில் பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை வைத்திருந்த இளைஞன் கைது
முல்லைத்தீவில் (Mullaitivu) பல இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன், நேற்றையதினம் (04.04.2024) புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் மத்தி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த இளைஞன், அனுமதி பத்திரம் இல்லாமல் இருபத்தைந்து இலட்சத்திற்கு மேற்பட்ட பாலை, முதிரை, வாகை மரக்குற்றிகளை பலகையாக்கி தனது வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.
மீட்கப்பட்ட மரக் குற்றிகள்
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சந்தேக நபரின் சுதந்திரபுரம் மத்தியிலுள்ள பத்து ஏக்கர் காணியினை சுற்றிவளைத்து சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய, காணியில் தென்னோலையால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மரக்குற்றிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மரம் அறுக்க பாவித்த இயந்திரம் (செஞ்சோர்) மூன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், 29 வயது மதிக்கத்தக்க உடையார்கட்டு மூங்கிலாற்றை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam
