இலங்கையில் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றி பெருந்தொகை பணமோசடி: சந்தேகநபர் தப்பியோட்டம்
இலங்கையில் ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோரை ஏமாற்றி இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்ற நபரின் வங்கிக் கணக்குகளை தடை செய்ய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோசடி விசாரணைப் பணியகத்தின் (Fraud Investigation Bureau) சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கையில் விசேட தேவையுடையவர்களுக்கான நலன்புரிச் சங்கமொன்றை ஆரம்பித்து, அவர்களுக்காக பணத்தைச் சேகரித்து, அந்த பணத்தினை சந்தேகநபர் மோசடி செய்துள்ளார்.
சந்தேகநபர் வாக்குறுதியளித்தபடி நன்மைகளை வழங்காததால், ஆயிரக்கணக்கான விசேட தேவையுடையோர்கள் அவருக்கு எதிராக மோசடி விசாரணைப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
இதற்கமைய, சந்தேகநபருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் ஏற்கனவே வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளமை விசாரணையில் ரெியவந்துள்ளது.
சந்தேகநபர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

துபாயில் இந்தியர்களை வாளால் வெட்டிக்கொன்ற பாகிஸ்தானியர்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள் News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam

Viral Video: நிலநடுக்கத்தால் குலுங்கிய வீடு... தம்பியை தரதரவென இழுத்துக் கொண்டு ஓடிய சிறுவன் Manithan
