மகிந்தவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தை சி.ஐ.டியிடம் ஒப்படைக்க நடவடிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்குவதற்கான புதிய சட்டமூலம், சமீபத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, இந்த வீட்டை குற்றப் புலனாய்வுத் துறையிடம் புதிய வசதிகளுடன் கூடிய பணியிடமாக ஒப்படைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன், முன்னாள் ஜனாதிபதிகளின் ஓய்வூதியங்களைத் தவிர, அதிகாரப்பூர்வ குடியிருப்புகள் உட்பட மற்ற அனைத்து வசதிகளும் இரத்து செய்யப்படும்.
முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமை
மேலும், முன்னாள் ஜனாதிபதிகளின் உரிமைகளை நீக்கும் புதிய சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் இன்று அல்லது நாளை சபாநாயகரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசித்து வந்தார். அதற்கு முன்னர், பல அமைச்சர்கள் அங்கு வசித்து வந்ததமை குறிப்பிடத்தக்கது.





உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri
