பொலிஸாருக்கு மூவாயிரம் கைத்தடிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கை
பொலிஸாருக்கு மூவாயிரம் கைத்தடிகளை கொள்வனவு செய்ய பொலிஸ் திணைக்களம் கேள்விப்பத்திரங்கள் கோரியுள்ளது.
கலவரங்கள் மற்றும் சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் பணிகளின்போது, பொதுமக்களைக் கலைந்து செல்லச் செய்வதற்காக பொலிசார் பய கைத்தடிகள் பயன்படுத்தும் கைத்தடிகளைக்கொள்வனவு செய்வதற்காகவே குறித்த கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளன.
நீண்ட காலமாக பொலிஸ் திணைக்களம் அவ்வாறான கைத்தடிகளை கொள்வனவு செய்யவில்லை என்று பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைத்தடிகள்
தற்போது பொலிஸாருக்கு வழங்கப்படும் கைத்தடிகள் தேய்ந்து, பயன்படுத்த தகுதியில்லாத நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன் காரணமாகவே புதிய கைத்தடிகளை கொள்வனவு செய்வதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.




