ஓமானிலுள்ள இலங்கை பணிப்பெண்களை நாட்டிற்கு பாதுகாப்பாக அழைத்து வருவது தொடர்பில் கலந்துரையாடல்
இலங்கையிலிருந்து ஓமான் நாட்டுக்கு பணிப்பெண்களாக கொண்டு செல்லப்பட்டு, அங்கு சிக்கி தவிக்கும் மலையகம் உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப்பெண்களை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கலந்துரையாடியுள்ளது.
இந்த கலந்துரையாடல் நேற்றைய தினம் (22.11.2022) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், இதன்போது ஓமான் நாட்டில் விசா இன்றி தங்கியிருக்கும் பணிப்பெண்களிடம் நாளாந்தம் 5 திராம் அபராத தொகை அறவிடப்படுகிறது.
ஓமானில் சிக்கியுள்ள இலங்கை பெண்கள்
இலங்கையிலிருந்து ஓமானுக்கு பணிப்பெண்களாக சேர்த்து கொள்வதற்கு செலவு செய்த அனைத்து செலவுகளையும் வழங்கிவிட்டு பணிப்பெண்களை இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு அந்நாடு அறிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சும் இணைந்து ஓமானில் சிக்கியுள்ள மலையகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பணிப்பெண்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இலங்கைக்கு மீட்க்க நடவடிக்கை
இந்நிலையில் ஓமானில் தங்கியுள்ள இலங்கை பணிப்பெண்களை மீட்டெடுப்பதற்காக இலங்கையில் இருந்து தூதுக்குழு ஒன்று ஓமான் நாட்டிற்கு சென்று அவர்களை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்த கலந்துரையாடலில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான
ஜீவன் தொண்டமான், வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி மற்றும் தொழில் மற்றும்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நானயக்கார என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
