ஓமான் நாட்டிற்கு பணிப்பெண்னாக சென்ற மூவர் தொடர்பில் உறவினர்கள் விடுத்துள்ள கோரிக்கை (Video)
வவுனியா- கல்மடு பூம்புகார் பிரதேசத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 17 திகதி குருநாகல் ஏஜென்சி மூலம் ஓமான் நாட்டிற்கு பணிப்பெண் வேலைக்கு சென்ற 3 பெண்களை ஓமான் நாட்டு ஏஜென்சி தடுத்து வைத்திருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் இன்று. யாழ் ஊடக அமையத்தில் க.சந்திரிக்கா புஸ்பகுமாரி (பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் உறவினர்) என்பவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
உறவினர்களின் கோரிக்கை
“கடந்த ஒக்டோம்பர் மாதம் 18ம் திகதி பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்ததாகவும் பொலிஸார் ஒரு மாத தவணையில் தீர்வு பெற்றுதருவதாகவும் உறுதி அளித்திருந்த நிலையில் பொலிஸார் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை எனவும் அதனால்தான் ஊடகங்களுக்கு தகவலை வழங்குவதாகவும்” தெரிவித்துள்ளார்.
மேலும், “குருநாகல் பாணகம பகுதியில் இருக்கின்ற பிரயாண முகவர் ஒருவர் மூலம்
அனுப்பப்பட்ட பெண்களை திருப்பி நாட்டிற்கு அமைக்குமாறு கேட்டபோது, முகவரோ
5லட்சம் பணம் தந்தால் மாத்திரம் திருப்பி நாட்டிற்கு அழைக்கலாம் என
தெரிவித்ததாகவும் பொலிஸார் தன்னை ஒன்றும் செய்ய இயலாது என முகவர் கூறியதாகவும்” உறவினர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 2 நாட்கள் முன்

சூப்பர் சிங்கர் மேடையில் திடீரென கண்ணீர்விட்டு அழுத பாடகர் பென்னி தயாள்- வீடியோவுடன் இதோ, என்ன ஆனது? Cineulagam
