கிளிநொச்சி பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள குடிநீர் விநியோக திட்டத்தை முன்னெடுக்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உறுதி
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தடைப்பட்டுள்ள குடி நீர் விநியோகத் திட்டத்தை விரைந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பதாக, நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்மைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் உறுதியளித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் அமைச்சர் ஜீவன் தொண்டமானை அமைச்சு அலுவலகத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கிளிநொச்சி மாவட்ட- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் திட்டமானது, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் நீர் வழங்கல் சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மேம்பாட்டுத்திட்டம்
இத்திட்டத்தின் நிறைவில் பளை பிரதேசத்தின் 09 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன் பெறுவார்கள் என்பதோடு எதிர்காலத்தில் இத்திட்டத்தை விரிவாக்கம் செய்யம் முடியும்.
கடற்கரையை அண்டி ஒடுங்கிய நிலப்பரப்பை கொண்ட பிரதேசமாக உள்ள பச்சிலைப்பள்ளியின் பெரும்பாலான கிராமங்களின் நிலத்தடி நீர் உவர் நீராகவே காணப்படுகிறது. எனவே மக்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகளுக்கான தீர்வாகவே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் முதற்கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், பளையில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியை கிளிநொச்சி நீர்த்தாங்கியுடன் இணைப்பதற்கான நீர்குழாய்கள் இன்மையால் இத் திட்டம் இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அமைச்சரின் கவனத்திற்கு
கொண்டு சென்றதை அடுத்து, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவருக்கு
உடனடியாக அறிவுறுத்தல்களை வழங்கிய அமைச்சர் ஜீவன் தொண்டமான்,
இத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
