இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் இது தொடர்பான கலந்துரையாடல் இன்று(5) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
குழு நியமனம்
குடிவரவு, குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர், வௌிநாட்டலுவல்கள் அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்கள அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் கொண்ட இந்தக் குழுவின் தலைவியாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திமா விக்ரமசிங்க செயற்படவுள்ளார்.
அழைத்து வர நடவடிக்கை
மேலும் யுத்த காலத்தில் இலங்கையில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளவர்களை மீண்டும் அழைத்து வருமாறு "ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பு" (OFERR) விடுத்த வேண்டுகோளுக்கமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போதைக்கு இந்தியாவில் சுமார் 58 ஆயிரம் இலங்கையர்கள் தஞ்சம் புகுந்துள்ளதுடன் அவர்களில் 3800 பேரளவில் மீண்டும் இலங்கை திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதையடுத்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை இலகுபடுத்துவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும் இச்செயன்முறையை இலகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.
பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் (OFERR) பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ். சூரியகுமாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
