துர்நாற்றம் வீசும் மட்டக்களப்பு வீதி! அசௌகரியத்தில் மக்கள்
மட்டக்களப்பு பார் வீதி பகுதியில் தொடர்ச்சியாக துர்நாற்றம் வீசி வருவதால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உட்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக மட்டக்களப்பு பார் வீதியில் அமைந்துள்ள நீரோடை அருகே நாய் ஒன்று இறந்து கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அப்பிரதேசத்தில் நீரோடை பகுதியில் மீன் கழிவுகள், கோழி கழிவுகள், குப்பை பொருட்கள் சுற்றாடலை பாதிக்கும் வகையிலான துர்நாற்றம் வீசக்கூடிய பொருட்களும் வீசுவதனால் குறித்த பகுதியால் செல்லும் போது துர்நாற்றம் வீசுவதாக அறிய முடிகின்றது.
குறித்த பகுதியில் இன்றைய தினம் அடையாளம் காணப்படாத நபர் ஒருவரின் சடலம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கை
சடலத்தை பார்வையிட வந்த பெருந்திரளானோர் குறித்த சடலத்தால் தான் துர்நாற்றம் வீசியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியை துப்பரவு செய்வது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அவ்விடத்தில் நின்ற ஊடகவியலாளர் மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரை தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பாக பேசியுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது உடன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, மாநகர சபை ஊழியர் சிலரை குறித்த இடத்துக்கு அனுப்பி நான்கு தினங்களாக இறந்து கிடந்த நாயினை வெட்டித்தாட்டுள்ளதுடன் கழிவுகள் கொட்டப்படுகின்ற இடத்தினை சுத்தம் செய்யாமல் சென்றுள்ளனர் என கூறப்படுகின்றது.
ஆகவே அந்த வடிகான் பகுதியை துப்புரவு செய்து துர்நாற்றம் இல்லாமல் மக்கள் பயணிப்பதற்கு மட்டக்களப்பு மாநகர சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 12 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
