மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸாருக்கு பணிப்புரை
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள நீர் கடந்து செல்லும் ஆபத்தான இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸாருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையிலெயே அரசாங்க அதிபர் குறித்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு சித்தாண்டி கிரான் வாகரை வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் பிரதான வீதியை குறுக்கறுத்து. வெள்ளநீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட அரசாங்க அதிபரினால் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு நாசிவன் தீவு பகுதியிலும் பிரதான வீதி ஊடாக இரண்டு அடிக்கு மேலாக வெள்ள நீர் வேகமாக கடந்து செல்வதனால் பொதுமக்கள் அப்பகுதியில் வேடிக்கை பார்க்க செல்வதும் ஆபத்தான முறையில் அதனை கடந்து செல்வதுமாக உள்ளனர்.
காணாமல் போயுள்ள நபர்
இதேவேளை நேற்று மாலை வாழைச்சேனைப் பகுதியைத் தேர்ந்த இளைஞர் பாதையை ஊடாக கடந்து செல்ல முற்பட்ட போது வெள்ள நீரினால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போய் உள்ள நிலையில் நபரைத் தேடும் பணிகளில் அப்பகுதி மீனவர்களும் பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தை கேள்வியுற்ற மாவட்ட அரசாங்க அதிபர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று கள நிலவரத்தை ஆராய்ந்து மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |