டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து ஈரானுக்கு கிடைத்த கெட்ட செய்தி! அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறது அமெரிக்கா
ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்திற்கு இணங்கவில்லையெனில் மிகத் தீமையான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானை எச்சரித்துள்ளது.
வாஷிங்டனில் நடைபெற்ற அமைதி வாரியக் கூட்டத்தின் போது, ஈரானுக்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
மேலும், எந்த ஒப்பந்ததும் எட்டப்படாவிட்டால் தீய விளைவுகள் ஏற்படும் என்று ட்ரம்ப் ஈரானை எச்சரித்ததோடு, 10 நாட்கள் கால அவகாசம் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடும் எச்சரிக்கை
தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
“ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை மேற்கொள்வது எளிதல்ல என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்தை செய்ய வேண்டும். பேச்சுவார்த்தைகள் சரியான திசையில் சென்று கொண்டிருக்கின்றன.

இந்த ஒப்பந்தங்கள் சரியாக எட்டப்படாதவிடத்து தவறான மற்றும் தீய விளைவுகளையே சந்திக்க நேரும்.
மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அடுத்த 10 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும்” என்று எச்சரித்துள்ளார்.
சரவணன், அஞ்சலியை ஒரே இடத்தில் பார்த்து அதிர்ச்சியடையும் மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam
மீனாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முத்து.. ரோகிணியுடன் மீண்டும் இணைந்துவிட்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam