நிலக்கரி கொள்முதல் தொடர்பில் அதிகாரிகளிடம் வாக்குமூலம் : ஆணைக்குழு நடவடிக்கை
நிலக்கரி கொள்வனவு தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, கொள்முதல் குழு அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
அண்மைக்காலமாக இலங்கைக்குத் தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக ஆதார பூர்வமான தகவல்கள் வெளியானதையடுத்து, கடந்த 2009ஆம் ஆண்டு தொடக்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கொள்வனவுகள் தொடர்பான விபரங்களை விசாரிப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் வாரத்தில் தொடங்க திட்டம்
இலங்கை நிலக்கரி நிறுவனத்தன் கொள்முதல் செய்யும் கொள்முதல் குழுக்களின் அதிகாரிகளிடமிருந்தே மேற்குறித்த ஆணைக்குழு, தற்போது வாக்குமூலங்களைப் பெறத் தொடங்கியுள்ளது.

நேற்று (08.06.2026) 4 கொள்முதல் குழு அதிகாரிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை சுமார் 50 அரசு அதிகாரிகளிடமிருந்து ஆணைக்குழு வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது.
அதேநேரம் நிலக்கரி கொள்வனவுகள் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு இதுவரை 28 முறைப்பாடுகளைப் பெற்றுள்ளது.
ஆணைக்குழுவின் பகிரங்க சாட்சி விசாரணை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam