லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர்

Sajith Premadasa Crime Death
By Rakesh Oct 27, 2025 12:33 AM GMT
Report

வெலிகம பிரதேச சபையில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் இல்லத்துக்கு நேற்றையதினம்(26) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துக்கொண்டார்.

அநுரவிற்கு அருகில் இருப்பவர்களால் ஆபத்து! இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அச்சத்தில் அநுர..

அநுரவிற்கு அருகில் இருப்பவர்களால் ஆபத்து! இராணுவத்தின் மீது நடவடிக்கை எடுப்பதில் அச்சத்தில் அநுர..

பக்கச்சார்பற்ற விசாரணை

அன்னாரின் இந்தக் கொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்கள் முன்னிலையில் கூறினார்.

லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் | Statement By The Opposition Leader Sajith Weligama

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கொலைக் கலாசாரம் சமூகத்தில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது.

மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்குத் தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வது, நாட்டில் கொலைக் கலாசாரத்தின் மற்றொரு அங்கமாகும்.

இன்று நாட்டில் சட்டம் - ஒழுங்கு இல்லை. காட்டுச் சட்டம் மட்டுமே காணப்படுகின்றது.

லசந்த கொலையின் துப்பாக்கிதாரியை கைது செய்யும் பரபரப்புக் காட்சி

லசந்த கொலையின் துப்பாக்கிதாரியை கைது செய்யும் பரபரப்புக் காட்சி

 கொலைக் கலாசாரம்

இதன் காரணமாக, குடிமக்களின் வாழ்க்கை சீரழிந்து போயுள்ளது. இந்தக் கொலைக் கலாசாரத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.

லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சித் தலைவர் | Statement By The Opposition Leader Sajith Weligama

தற்போதைய அரசின் பலவீனம் காரணமாக, சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப் போயுள்ளது. இது மக்களின் வாழும் உரிமை மீது விழுந்த அடியாக அமைந்து காணப்படுகின்றது.

மக்களின் வாழும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும். ஆகையால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

லசந்த விக்கிரமசேகரவின் கொலை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும். தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் மூலம் பொலிஸ்மா அதிபரிடம் அவர் பாதுகாப்பு கோரிய போதிலும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

இவ்வாறு பாதுகாப்பு வழங்காமை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடொன்றில் 250 கிராம் 24 கரட் தங்கக் கட்டியை வென்ற இலங்கையர்

வெளிநாடொன்றில் 250 கிராம் 24 கரட் தங்கக் கட்டியை வென்ற இலங்கையர்

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US