சஜித்துக்கு சவால் விடும் ஜானக வக்கும்புர
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு முடிந்தால், வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இலங்கைக்கு ஒரு தடுப்பூசியையாவது பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு ராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மக்களை காப்பாற்ற தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குமாறு ஜனாதிபதியும், பிரதமரும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாட்டுத் தூதுவர்களை சந்தித்ததை நாம் பார்த்தோம்.
தூதுவர்களை சந்திப்பது நல்லது. ஆனால் சிண்டு மூட்டிவிடக் கூடாது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு முடிந்தால், வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து நாட்டுக்கு ஒரு தடுப்பூசியை பெற்றுக் கொடுக்குமாறு கோருகிறோம் எனவும் வக்கும்புர குறிப்பிட்டுள்ளார்.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
