வீதிச்சோதனை சாவடியில் அதி நவீன கண்காணிப்பு கமராக்கள் (Video)
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பாலத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவப் படையினர் இணைந்த வீதிச் சோதனைச் சாவடியில் அதிநவீன கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டு இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரி.அபேயவிக்கிரமவின் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கமல் சில்வா, மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் தினேஸ் கருனாநாயக்க, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுதத் மாசிங்க களுவாஞ்சிகுடிப் பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ஜெயரத்ன உள்ளிட்ட பெலிஸ் உயரதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பெரியகல்லாறு பாலத்தில் அமைந்துள்ள பொலிஸ் மற்றும் இராணுவப்படையினர் இணைந்த வீதிச் சோதனைச் சாவடியில் பொருத்தப்பட்டுள்ள அதி நவீன கண்காணிப்புக் கமராக்கள் மூலம், மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பயணிக்கும் சந்தேகத்துக்குடமான வாகனங்கள், குற்றச் செயல்களில் ஈடுபட்டு விட்டு வாகனங்களில் தப்பிச் செல்பவர்களையும், இலகுவான முறையில் அடையாளம் காண முடியும் என இதன்போது கலந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
