நாளை மறுதினம் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம்
எதிர்வரும் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டதன் பின்னர் மாகாணங்களுக்குள் போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த காலப்பகுதியில் பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பின்பற்றி பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், பேருந்து கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் போக்குவரத்து அமைச்சுடன் கலந்துரையாட உள்ளதாகவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்தக் காலப்பகுதியில் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
