ஒற்றையாட்சி குறித்து டக்ளஸின் நிலைப்பாடு

Douglas Devananda Sri Lanka Northern Province of Sri Lanka
By Kajinthan May 23, 2024 02:38 AM GMT
Report

இலங்கையில் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் இருந்து கொண்டு ஒற்றையாட்சி வேண்டாமென்று கூறுவது சுத்த ஏமாற்றுத்தனம் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மன்னார் (Mannar) மாவட்ட அமைப்பாளர்கள் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கும் இராணுவம்

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கும் இராணுவம்

ஒற்றையாட்சி முறைமை

மேலும் தெரிவிக்கையில், “சமஷ்டிதான் வேண்டும், ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வை காணமுடியாது என குழப்பங்களை ஏற்படுத்தித்திரியும் தரப்பினர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒற்றையாட்சி முறைமையை ஏற்றுத்தான் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.

standing-unitary-structure-saying-not-want-unitary

அதேபோன்று இலங்கையில் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் உள்ள உள்ளூராட்சி மன்றமானாலும் சரி மாகாண சபையானாலும் சரி ஒற்றையாட்சிக் கட்டமைப்பிலேயே நடைபெறுகின்றது.

இத்தனையிலும் போட்டியிட்டு வெற்றிபெற்று இலங்கையின் இறைமையை பாதுகாப்பேன் என உறுதிப்பிரமாணம் எடுத்து அதனூடான சலுகைகளையும் வரப்பிரசாதங்களையும் பெற்றுக்கொண்டு, இன்று ஒற்றையைாட்சி கட்டமைப்பு உள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்போம் என ஒருபுறமும் பொதுவேட்பாளரை போட்டியிடச் செய்வோம் என இன்னொருபுறமும் கூறிவருவது வேடிக்கையாக உள்ளது.

உண்மையில் அன்று ஈ.பி.டி.பியின் அதீத வளர்ச்சியை கண்டு அஞ்சியே விடுதலைப்புலிகள் தலைமை தமிழ் தேசியக் கூட்டமைப்பை அதாவது புலிகளின் அச்சுறுத்தல்களால் உயிருக்கு பயந்து ஓடி ஒழித்திருந்தவர்களை எல்லாம் அழைத்து ஒரு மூட்டையாக கட்டிய புலிகள் அமைப்பின் தலைமை தமது அரசியல் செயற்பாடுகளுக்கான கைப்பாவைகளாக இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை செயற்படுத்தியிருந்தனர்.

தமிழ் தரப்பினர்

ஆனாலும், இந்த கூட்டமைப்பின் அரசியல் திட்டத்துக்கு மக்கள் அதிகளவில் செவிசாய்க்காது ஈ.பிடி.பியின் பக்கம் சென்றால் தான் தமது தேவைகளை அடையலாம் என்று மக்கள் அவர்களை நோக்கி செல்வதை தடுக்க முடியாதவர்களாக எம்மீது அவதூறுகள், சேறுபூசல்கள் என்ற தாக்கத்தை ஏற்டுபடுத்தவல்ல பிரசாரப் பாணியை விடுதலைப்புலிகள் கையிலெடுத்திருந்தனர்.

standing-unitary-structure-saying-not-want-unitary

எம்மீதான சேறுபூசல்களை செய்து அன்று அரசியல் இலாபங்களை புலிகள் தரப்பினர் பெற்றிருந்தாலும் தமிழ் மக்களை வெற்றியாளர்களாக்குவதில் மட்டுமல்லாது தம்மை பாதுகாப்பதிலும் தோல்வி கண்டுவிட்டனர்.

ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் ஒவ்வோரு கதைகளை கூறி மக்களை குழப்புவதிலும் மக்கள் நலன்களிலிருப்பதாக தம்மை காட்டி மக்களது வாக்குகளை அபகரித்து தமது இருப்புக்களை பலப்படுத்திக் கொள்வதுமே இந்த தேசிய சுயநலம் பிடித்த தமிழ் தரப்பினரது செயற்பாடாக இருந்து வருகின்றது” என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்

ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்

மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

மின்சாரக் கட்டணங்களை குறைக்குமாறு சஜித் கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US