ஒரு தொகுதி அரசாங்க ஊழியர்களுக்கு மீண்டும் அதிகரிக்கும் சம்பளம்
இலங்கையில் 13,000க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, இலங்கை கிராம சேவையாளர் சேவையை ஸ்தாபிப்பதற்காக, சேவைக்கான அரசியலமைப்பு வரைவு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சார்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று நாடாளுளுமன்றத்தில் பதில் அளிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
புதிய சம்பளக் குறியீடு
இது மிகப்பெரிய வெற்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, கிராம அதிகாரிகளுக்கு GN என்ற புதிய சம்பளக் குறியீடு கிடைக்கும் என விளக்கமளித்துள்ளார்.

மேலும் புதிய கிராம அலுவலரின் அடிப்படை சம்பளம் 28,940 ரூபாய் முதல் 30,140 ரூபாயாக உயரும். கிராம எழுத்தர் சேவையில் தரம் 2 அதிகாரியின் அடிப்படை சம்பளம் 33,690 ரூபாயாகவும் தரம் 3 அதிகாரியின் அடிப்படை சம்பளம் 38,590 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan