தனியார் வங்கி ஒன்றினால் வாடிக்கையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள செய்தி
இலங்கையில் தனது வெல்த் ரூ ரீடெய்ல் பேங்கிங் (WRL) வணிகத்தை விற்பனை செய்வது குறித்து ஆராய்ந்து வருவதாக ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் குழுமத்தின் வலுவான வாடிக்கையாளர் முன்மொழிவைக் கொண்ட சந்தைகளில் கவனம் செலுத்துவதற்கான, சர்வதேச உத்தியின் ஒரு பகுதியாகும் என்று வங்கி கூறியுள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு உறுதி
சுமார் 15-18 மாதங்கள் எடுக்கும் என எதிர்பார்க்கப்படும் இந்த மாற்ற செயல்முறை, அன்றாட வங்கி நடவடிக்கைகளை பாதிக்காது என்றும், அனைத்து வைப்புத்தொகைகளும் நிதிகளும் பாதுகாப்பாக இருக்கும் என்றும் குறித்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது.

மாற்றத்தின் போது நாங்கள் வழக்கம்போல உங்களுக்கு சேவை செய்வோம் என்று வங்கியின் செய்தி கூறுகிறது, விற்பனை ஒழுங்குமுறை ஒப்புதல்களுக்கு உட்பட்டது என்றும் அது கூறியுள்ளது.
மாற்றத்தை குறைந்தபட்ச இடையூறுடன் நிர்வகிக்க உறுதிபூண்டுள்ளதாகவும், மேலும் முன்னேற்றங்கள் குறித்து வாடிக்கையாளர்களுக்கு அறியத்தருவதாகவும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
முன்னாள் மனைவி, குடும்பத்தினரைக் கொல்ல 9 கூலிப்படைகளை அனுப்பிய நபர்: பிரித்தானியாவில் கைது News Lankasri
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
காந்திமதியை வீட்டைவிட்டு வெளியே போகச்சொன்ன கதிர், ஷாக்கான குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri