தமிழக கடற்றொழிலாளர்களை விடுவிக்க கோரி ஸ்டாலின் இந்திய பிரதமரருக்கு கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக கடற்றொழிலாளர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்க கோரி, தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அத்துடன் கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“கடந்த 28 நாட்களில் மாத்திரம் 88 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Urging Hon'ble PM Thiru. @narendramodi to address the urgent issue of Tamil fishermen's apprehension by Sri Lankan authorities. Recent weeks saw 88 fishermen & 12 boats seized. The nationalisation of seized boats by Sri Lankan Government exacerbates their plight. We need… pic.twitter.com/F5bDBvPE3S
— M.K.Stalin (@mkstalin) February 9, 2024
நரேந்திர மோடியிடம் கோரிக்கை
அத்துடன், 12 படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், இலங்கையில் தற்போது சிறைப்பிடிக்கப்பட்டுள்ள 77 கடற்றொழிலாளர்களையும் 151 படகுகளையும் உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.” என பிரதமர் நரேந்திர மோடியிம் தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின் கோரியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |