சிக்கலாகும் ஈழத்தமிழர் விவகாரம்! மோடியின் கட்டுப்பாட்டில் ஸ்டாலின் (Video)
இந்திய பிரதமர் மோடி தன்னுடைய நிகழ்ச்சிகளுக்கு ஏற்றாற் போன்று தி.மு.க அரசாங்கத்தை கொண்டுவந்துவிட்டார் என இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் அ.நிக்சன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி தங்களுடைய கொள்கையை தான் தற்போது தமிழ்நாட்டிற்குள் கொண்டு வருகின்றது. பொதுவாக தி.மு.க மற்றும் ஆ.தி.மு.க ஆகிய இரு திராவிட கட்சிகளும் ஈழத் தமிழரின் வாதத்தை அனுதாபமாக தான் பார்கின்றனர். ஆனால் அவர்களின் செயற்பாடுகள் டெல்லியின் கொள்கையுடனே காணப்படுகின்றது.
தமிழக தலைவர்கள் தேர்தல் காலத்தில் ஈழ மக்களின் பிரச்சினைகளை பேசும் அளவிற்கு அவர்கள் பதவிக்கு வருகைதந்த பின்னர் அதில் கவனம் செலுத்துவதில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த போது தமிழக சட்ட சபையில் இன அழிப்பு தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அப்படி தீர்மானம் நிறைவேற்றபட்டால் அடுத்து வரும் அரசாங்கம் அதனை பின்பற்ற வேண்டும். ஆனால் இங்கு அவ்வாறு செய்யவில்லை.
மேலும் ஈழ தமிழர் விடயத்தில் அவர்கள் கோருகின்ற சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதில் அவர்களுக்கு பிரச்சினை உண்டு. அதாவது இந்திய இதில் வித்தியாசமான போக்கை கையாளுகின்றது என கூறியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல விடயங்களை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 13 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri