கனடாவில் பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் நியமனம்! மு.க.ஸ்டாலின் வாழ்த்து
கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக தமிழ் மரபை சேர்ந்தவரும், முன்னாள் சட்டப் பேராசிரியருமான அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து கூறியுள்ளார்.
தனது டுவிட்டர் ப்பக்கத்தியில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மையில் கனடாவில் இடம்பெற்ற பொது தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிான கட்சி வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைத்துள்ளது.
இதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் 39 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டது. இதில் பாதுகாப்பு அமைச்சராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அவரின் டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெருந்தொற்று காலத்தில், கனாடா நாட்டின் கொள்முதல் துறை அமைச்சராக பாராட்டத்தக்க முறையில் பணியாற்றினார்.
அதைத் தொடர்ந்து, அந்நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் புதிய பணியிலும், சிறப்பாக செயல்பட நல்வாழ்த்துகள்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
I'm happy to know that Hon'ble @AnitaOakville - a person of Tamil origin & a former Professor of Law - has been appointed as the Minister of @NationalDefence after her appreciable stint as Procurement Minister during the pandemic. I convey my best wishes to excel in her new role. https://t.co/a3TDJvBTXG
— M.K.Stalin (@mkstalin) October 28, 2021