ஊழியர்களின் பணி புறக்கணிப்பு: திணறும் கோவிட் தொற்றாளர்கள்
கடந்த சில நாட்களாகக் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்கு மருந்துகள் வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக கோவிட் நோயாளிகள். மாதாந்த கிளினிக் நோயாளிகள், மற்றும் வெளிநோயாளர் பிரிவு நோயாளிகள் ஆகியோரும் முழுமையான சேவைகளைப் பெற்றுக்கொள்ளாது வீடுகளுக்குத் திரும்பும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தாதியர்கள் உட்பட 18 சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் கடந்த திங்கள் கிழமை முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் காரணமாக வைத்தியசாலைகளுக்குச் சிகிச்சை பெறச் சென்ற நோயாளிகள் மருந்துகளைப் பெறமுடியாது வீடுகளுக்குத் திரும்புகின்றனர்.
கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளுக்குக் கூட மருந்துகள் வழங்கப்படவில்லை எனவும் இதனால் வசதியுள்ள சிலர் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை வாங்கி செல்வதாகவும் பொது மக்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்ரே, இரத்தம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகள்
மேற்கொள்ளப்படவில்லை என்றும் சத்திர சிகிச்சைகள் கூட
பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan