"பாண்ட" இசைப் போட்டியில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி முதலிடம்
மன்னார் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இடையிலான பாண்ட் இசை போட்டியானது இராணுவத்தின் 54 காலாட்படையின் ஏற்பாட்டில் மன்னார் பொது விளையாட்டரங்கில் நேற்று (7) இடம்பெற்றது.
குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த 15 பாடசாலைகள் கலந்து கொண்ட நிலையில் பல்வேறு தகைமையின் அடிப்படையிலும் பிரிவுகளிலும் போட்டிகள் இடம்பெற்றது.
வெற்றிக்கிண்ணங்கள்
போட்டிகளில் மதிப்பெண்களின் அடிப்படையில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி பாண்ட் அணியினர் மாவட்ட ரீதியாக முதலிடம் பெற்று கொண்டனர்.

அதே நேரம் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி இரண்டாம் இடத்தையும் மன்னார் வெள்ளாங்குளம் பாடசாலை மூன்றாம் இடத்தையும் பெற்று கொண்டது.
போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்று கொண்ட அணியினருக்கு இராணுவத்தினரால்
வெற்றிக்கிண்ணங்கள், சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.



உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri