15 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: கிரேக்க அரசின் அதிரடி முடிவு
சிறுவர்களிடையே அதிகரித்து வரும் இணையவழி மிரட்டல்கள் (Cyberbullying) மற்றும் சமூக ஊடக அடிமைத்தனத்தைத் தடுக்கும் நோக்கில், 15 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த கிரேக்க அரசு விரைவில் தடை விதிக்கவுள்ளது.
அவுஸ்திரேலியா ஏற்கனவே 16 வயதிற்குட்பட்டோருக்கு இத்தகைய தடையை விதித்துள்ள நிலையில், அதே பாதையில் கிரேக்கம் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
கிரேக்க அரசு
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த நாட்டில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பின்படி, சுமார் 80 சதவீத மக்கள் அரசின் இந்தத் தடைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே பாடசாலைகளில் கைபேசி பயன்படுத்த கிரேக்க அரசு தடை விதித்துள்ளதுடன், திரை நேரத்தைக் குறைக்கப் பெற்றோருக்கான கட்டுப்பாட்டு தளங்களையும் அமைத்துள்ளது. சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
கிரேக்கத்தில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் சிறுவர்களில் 75 சதவீதம் பேர் ஆரம்பப் பாடசாலை வயதுடையவர்கள் என்றும், இவர்களால் தங்களை இணையவழி ஆபத்துகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடிவதில்லை என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடகத் தடை
மேலும், 48 சதவீத பதின்ம வயதினர் சமூக ஊடகங்களால் எதிர்மறையான பாதிப்புகளை உணர்வதாகப் போதை ஒழிப்பு தேசிய அமைப்பு தெரிவித்துள்ளது.

"நாங்கள் எங்களின் பொறுமைப் போக்கின் எல்லைக்கே சென்றுவிட்டோம், எங்களுக்கு அரசின் உதவி தேவை" என்று எதென்ஸைச் சேர்ந்த பெற்றோர்கள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இருப்பினும், இந்தத் தடையைச் சரியாக நடைமுறைப்படுத்த முடியுமா என்றும், சிறுவர்கள் மாற்று வழிகளைக் கண்டுபிடித்து மீண்டும் சமூக ஊடகங்களுக்குள் நுழைவார்களா என்றும் சில பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
உடம்பு முடியாமல் இருப்பவரை பார்த்து கிண்டல் செய்த பாண்டியன், கோபத்தில் கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam