தென் சீனக் கடலில் அதிகரித்துள்ள சீனாவின் இராணுவ நடவடிக்கைகள்! தாய்வானின் முக்கிய அறிவிப்பு
தென் சீனக் கடலின் வடக்கு முனையில் அமைந்துள்ள பிராட்டாஸ் தீவுகளில் (Pratas Islands) சீனாவின் இராணுவ நடவடிக்கைகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அந்த தீவுகளின் பாதுகாப்பை பலப்படுத்தப் போவதாக தாய்வான் அறிவித்துள்ளது.
தாய்வான் கடலோர காவல்படையை நிர்வகிக்கும் கடல் விவகார பேரவை அமைச்சர் குவான் பி-லிங் (Kuan Bi-ling), சீனக் கடலோர காவல்படை படகுகள் இந்தப் பகுதியில் தொடர்ந்து 'கிரே ஸோன் ஹரஸ்மென்ட்' (Grey zone harassment) எனப்படும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
முக்கிய இலக்கு
தாய்வானின் பிரதான நிலப்பரப்பிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்தத் தீவுகள், போர் மூண்டால் சீனாவின் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்பு அதிகம் என்பதால், அவற்றைப் பாதுகாப்பது தற்போது தாய்வானின் முக்கிய இலக்காக மாறியுள்ளது.
முன்னதாக தாய்வான் மற்றும் கின்மென் தீவுகளைச் சுற்றியே சீனா தனது கப்பல்களை நிலைநிறுத்தி வந்த நிலையில், தற்போது பிராட்டாஸ் தீவுகளை நோக்கியும் தனது கவனத்தைத் திருப்பியுள்ளதாக குவான் பி-லிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் மற்றும் வியூகம் சார்ந்த கண்ணோட்டத்தில் இந்தத் தீவுகளைக் கைப்பற்றுவது சீனாவுக்குப் பெரும் பலமாக அமையும் என்பதால், அங்குள்ள கப்பல்துறைமுகத்தைப் புதுப்பித்தல் மற்றும் நவீன போர் கப்பல்களை நிலைநிறுத்துதல் போன்ற பணிகளில் தாய்வான் ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக, அமைதிக் காலத்திலிருந்து போர்க்கால தயார்நிலைக்கு விரைவாக மாறுவதற்கான பயிற்சியையும், ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்ட புதிய 'அன்பிங்-கிளாஸ்' (Anping-class) கப்பல்களைப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சீனாவின் இந்தத் தொடர்ச்சியான அழுத்தம், பிராந்தியத்தில் மீட்புப் பணிகளுக்கான வளங்களை வீணாக்குவதுடன் இருதரப்பு மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தாய்வான் குற்றம் சாட்டியுள்ளது.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam