எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பிறகு இலங்கையின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடர வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வுத்துறையின் வானிலை ஆய்வாளர் ஸ்ரீமல் ஹெரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 15ஆம் திகதிக்குப் பிறகு மழை படிப்படியாகக் குறையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையைப் பாதித்துள்ள எல்நினோ நிலை அடுத்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வரை தொடரலாம். இதனால், தற்போது வறண்ட வானிலையை அனுபவிக்கும் பகுதிகள் மேலும் பாதிக்கப்படும்.
உடல் வெப்பநிலை அதிகரிக்கும் வாய்ப்பு
தொடர்ந்து நிலவும் வறண்ட நிலை காரணமாக, எதிர்காலத்தில் காற்றின் வேகம் குறையக்கூடும். இதனால் ஈரப்பதத்துடன் உடல் வெப்பநிலையும் மீண்டும் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போது நுவரெலியா, கண்டி உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை வீழ்ச்சி பதிவாகி வருகின்றதுடன், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை உள்ளிட்ட மாவட்டங்களில் வறட்சியான காலநிலை நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அச்சத்தில் நாட்டிலிருந்து அவசரமாக தப்பியோடும் அரசியல்வாதி மற்றும் உயர் அதிகாரிகள் - ஆதாரங்களுடன் நெருங்கும் புலனாய்வாளர்கள்