உங்கள் கணிப்புகள் அமெரிக்காவை புதைகுழிக்குள் தள்ளும்! ட்ரம்பிற்கு ஈரான் பதிலடி..
அமெரிக்காவின் இராணுவ இலக்குகள் விரைவில் எட்டப்படும். அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் ஈரானின் முக்கியப் பகுதிகள் மீது மிகக் கடுமையானத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்தார்.
ஈரான் மீண்டும் கற்காலத்திற்கு செல்லும், ஈரானின் ராணுவ வலிமை ஏற்கனவே சிதைக்கப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
ஈரான் பதிலடி
இதற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.

ஹாலிவுட் பிரமைகள் உங்கள் மனதை பாதித்துள்ளன என்று ஈரானிய புரட்சிகர காவல்படையின் தளபதி பிரிகேடியர் ஜெனரல் சையத் மஜித் மூசாவி தெரிவித்துள்ளார்.
வெறும் 250 ஆண்டுகால வரலாற்றை வைத்துக்கொண்டு, 6,000 ஆண்டுகளுக்கு மேலான நாகரீகத்தை மிரட்டுகிறீர்கள். ஈரானின் திறன்களைப் பற்றி அமெரிக்காவுக்கு எதுவும் தெரியாது.
உங்களின் கணிப்புகள் அமெரிக்காவை புதைகுழிக்குள் தள்ளும்" என்று தெரிவித்தார்.
7,000 ஆண்டுகால நாகரிகம்
தற்கிடையே இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உங்கள் குண்டுவீச்சுகளால் நாங்கள் மீண்டும் கற்காலத்திற்குத் தள்ளப்பட மாட்டோம்.
We will not be driven back to the Stone Age by your bombings.
— Iran in India (@Iran_in_India) April 2, 2026
We are a nation with 7,000 years of civilization.
History knows us well.
What is clear is this: it is YOU who have carried the killing of children and crimes against humanity from the Stone Age into the modern world.
நாங்கள் 7,000 ஆண்டுகால நாகரிகப் பாரம்பரியம் கொண்ட ஒரு தேசம். வரலாற்றுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும்.
தெளிவாகத் தெரிவது இதுவே, குழந்தைகளைக் கொல்வதையும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களையும் கற்காலத்திலிருந்து நவீன உலகிற்குச் சுமந்து வந்தவர்கள் நீங்களே ஆவீர்கள்" என்று தெரிவித்துள்ளது.
நெருக்கடியில் உதவாத ஐரோப்பிய நாடுகள்... உக்ரைன் தொடர்பில் அதிர்ச்சி முடிவெடுத்த ட்ரம்ப் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam