வடக்கின் பெரும் சமரில் யாழ்ப்பாணம் பரி யோவான் கல்லூரி வெற்றி
வடக்கின் பெரும் சமர் என அழைக்கப்படும் பரி யோவான் கல்லூரிக்கும் யாழ். மத்திய கல்லூரிக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் பரி யோவான் கல்லூரி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி, அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 131 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து, துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது முதலாவது இன்னிங்ஸில் 181 ஓட்டங்களை பெற்றது.
பரி யோவான் கல்லூரி வெற்றி
பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த யாழ். மத்திய கல்லூரி, 142 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து, 93 என்ற இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பரி யோவான் கல்லூரி, 5 விக்கெட்டுக்களை இழந்த நிலையில், இலக்கை அடைந்தது.
மேலதிக தகவல் - தீபன்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan