மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸை தோற்கடித்த இலங்கை மாஸ்டர்ஸ்
இந்தியாவில் இடம்பெற்று வரும் சர்வதேச மாஸ்டர்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், இலங்கை அணி மேற்கிந்திய தீவுகள் அணியை தோற்கடித்துள்ளது.
போட்டியில் முதல் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்புக்கு 179 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இதனையடுத்து, துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
அணிகள் பெற்றுள்ள புள்ளிகள்
இதன் அடிப்படையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சர்வதேச மாஸ்டர்ஸ் கிண்ண வெற்றி புள்ளி பட்டியலின் படி இந்திய அணி 6 புள்ளிகளையும் இலங்கை அணி ஆறு புள்ளிகளையும் பெற்றுள்ளன.
மேற்கிந்திய தீவுகள் அணி 4 புள்ளிகளையும், அவுஸ்திரேலிய மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் தலா 2 புள்ளிகளையும் பெற்றுள்ளன. இங்கிலாந்து அணி எவ்வித புள்ளிகளையும் பெறவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்து சமுத்திரத்தை பாதுகாக்க உக்ரைனில் இருந்து ட்ரம்ப் வெளியேறுகிறாரா..! 14 மணி நேரம் முன்

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
