மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 150வது ஆண்டு நிறைவு நிகழ்வு
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் 15வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நிகழ்வுகள் நேற்று மாலை வெகுவிமர்சையாக நடைபெற்றன.
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை அதிபர் அருட்சகோதரி நித்தாஞ்சலி தலைமையில் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
விசேட திருப்பலி பூஜை
150வது ஆண்டு நிறைவினைக்குறிக்கும் வகையில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் விசேட திருப்பலி பூஜை அருட்தந்தையர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
திருப்பலியை தொடர்ந்து தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா ஆலயத்திலிருந்து பேரணியொன்று பாடசாலை வரையில் நடைபெற்றது.
150வது ஆண்டினை குறிக்கும் வகையில் 150 வெளிச்சக்கூடுகளை ஏந்தியவாறு ஊர்வலம் மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பங்குபற்றுதலுடன் பாடசாலை வரையில் வருகைதந்தது.
நிகழ்வுகள்
அதனைத் தொடர்ந்து ஒன்றுகூடல் மண்டபத்தில் 150வது ஆண்டு சிறப்பினை குறிக்கும் வகையிலான பல்வேறு கலை நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் சிறப்புரைகளும் நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பழைய மாணவர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
தங்க விலையில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்.. சர்வதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பாபா வங்காவின் தகவல்










