கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் திருவிழாவில் 6,000-க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் பங்கேற்பு!
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயம் உயர்திருவிழாவிற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (27.02.2026) நடைபெற்ற திருவிழாவில், குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4,439 பக்தர்களும், நெடுந்தீவிலிருந்து 450 பக்தர்களும், ஊர்காவற்றுறையிலிருந்து 434 பக்தர்களும் பங்கேற்றுள்ளனர்.
கச்சத்தீவு திருவிழாவில் 6000 பேர் பங்கேற்பு
இந்நிலையில், குறிகட்டுவான் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து மேலும் 500 பக்தர்கள் சென்றடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, நீர்கொழும்பு மற்றும் மன்னார் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் நேரடியாக கச்சதீவை சென்றடைந்துள்ளனர்.

மேலும், குறிகட்டுவானில் இருந்து வந்தடைந்த 4,439 பக்தர்களும் கடற்படை மற்றும் தனியார் படகுகள் மூலம் கச்சதீவை சென்றடைந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆண்டு திருவிழாவைக் காண 6,000-க்கும் மேற்பட்ட இலங்கை பக்தர்கள் பங்கேற்றுள்ளதாகவும், இந்தியாவிலிருந்து 3,992 பக்தர்கள் வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சுரேஷ் சலே 90 நாள்கள் தடுப்புக்காவலில்! எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை - பலத்த எதிர்பார்ப்பில் பலர்..