கச்சதீவில் திரண்ட 13,500 பக்தர்கள்! புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கோலாகலமாக நிறைவு
இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழாவில் இந்த முறை ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றுவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று(27.02.2026) மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அடிகளால் திருவிழாக் கொடி ஏற்றிவைக்கப்பட்டு, உற்சவ நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
விசேட பூஜை வழிபாடுகள்
இதனைத் தொடர்ந்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி என்பன இடம்பெற்றன.
விசேட ஆராதனைகளை யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையிலான அருட்தந்தையர்கள் வழிநடத்தினர்.

இன்று(28.02.2026) காலை நடைபெற்ற பிரதான திருவிழாத் திருப்பலி, யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் தலைமையில், இலங்கை மற்றும் இந்திய அருட்தந்தையர்களின் பங்கேற்புடன் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அரசியல் தலைமைகள் பங்கேற்பு
திருப்பலி நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான திருவிழா உத்தியோகபூர்வமாக நிறைவு பெற்றது. இந்நிலையில், பிரதம நீதியரசர் பிரிதி பத்மன் சூரசேன, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ். இந்தியத் துணைத்தூதுவர் சாய் முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், யாழ். மாவட்ட அரச அதிபர் மருதலிங்கம் பிரதீபன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட உள்ளிட்ட கடற்படை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதுவரையில் இல்லாத வகையில், இதுவரை 13 ஆயிரத்து 500 இற்கும் அதிகமான பக்தர்கள் கடல் கடந்து வந்து புனித அந்தோனியாரின் அருளைப் பெற்றுக்கொண்டனர்.
பக்தர்களுக்கான போக்குவரத்து, உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை கடற்படையினரும் யாழ். மாவட்ட செயலகமும் இணைந்து முன்னெடுத்திருந்தன.
மத்திய கிழக்கு போர் சூழல்! கேள்விக்குறியாகும் இலங்கையர்களின் பாதுகாப்பு - அரசாங்கத்திடம் அவசர கோரிக்கை










உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan