எமது இனத்தின் வளர்ச்சி குறித்து சிறீதரன் வெளியிட்ட கருத்து
எமது இனத்தினுடைய வளர்ச்சியும், எழுச்சியும் என்பது எங்கள் பிள்ளைகளினுடைய எதிர்கலாத்தினுடைய நம்பிக்கைகளிலேயே இருக்கின்றது என யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று அல்வாய் பாரதி விளையாட்டுகழகத்தின் 70வது ஆண்டு நிறைவு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், "நல்ல ஆரோக்கியமுள்ள, மன தைரியமுள்ள, ஒரு திடமான இதயத்தைக்கொண்ட பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கு விளையாட்டுக்கள் மிக முக்கியமானவை.
சமூக கட்டமைப்பு
நாங்கள் நலிந்த ஒரு சமூகம் அல்ல, நாங்கள் நிமிர்ந்து நிற்கின்ற மிகவும் ஆரோக்கியமுள்ள சமூக கட்டமைப்பைக் கொண்ட ஒரு இனம்.
ஆகவே எமது இனத்தினுடைய வளர்ச்சியும், எழுச்சியும் என்பது எங்கள் பிள்ளைகளினுடைய எதிர்கலாத்தினுடைய நம்பிக்கைகளிலேயே இருக்கின்றது அதன் முழு விபரமும் வருமாறு.
அல்வாய் பாரதி விளையாட்டு விளையாட்டு விழா அனைவரினதும் ஒற்றுமையுடன் இனிதே நடைபெறுகிறது. அனைவரதும் ஒத்துழைப்புடனும் வரவேற்புடனும் இந்த மைதானத்தில் இடம் பெறுவது மிக மகிழ்ச்சியளிக்கிறது" என கூறியுள்ளார்.








