ஐ.நாவின் பாலியல் வன்முறை அறிக்கை - அநுர அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்! சிறீதரன் எம்.பி. காட்டம்

United Nations Parliament of Sri Lanka S. Sritharan Sri Lanka
By Rakesh Feb 18, 2026 01:04 AM GMT
Report

இலங்கையில் 1983 முதல் 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட விசேட அறிக்கை தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(17) நடைபெற்ற 'நாடாளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம்' மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது,

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்

ஐ.நா. அறிக்கையும் அரசின் மௌனமும்

"ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த 2026 ஜனவரி 13 ஆம் திகதியன்று 'இலங்கையில் மோதல்கள்சார் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள்' தொடர்பில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

1983 முதல் 2009 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் வன்முறைகள் குறித்து இந்த அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நாவின் பாலியல் வன்முறை அறிக்கை - அநுர அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்! சிறீதரன் எம்.பி. காட்டம் | Sritharan Mp Speech Parliament

எனினும், இந்த அறிக்கை தொடர்பில் அரசோ அல்லது பொறுப்பான அமைச்சரோ இதுவரை எந்தப் பதிலையும் வழங்கவில்லை.

இந்த அறிக்கையில் 23 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் தமக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் குறித்து சாட்சியமளித்துள்ளனர்.

இதற்கான ஆதாரங்களும் அந்த அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. யுத்த சூழலில் உயிர்பிழைத்தவர்கள், முறைப்பாடு செய்ய முடியாத அளவுக்குக் கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொண்டுள்ளனர்.

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்

நீதிக்கான காத்திருப்பும் குற்றவாளிகளும்

கடந்த காலங்களில் இடம்பெற்ற இத்தகைய வன்முறைகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் பலர் இன்றும் சுதந்திரமாக உலாவுகின்றனர். ஒரு சிலர் உயர்பதவிகளிலும் உள்ளனர்.

ஐ.நாவின் பாலியல் வன்முறை அறிக்கை - அநுர அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்! சிறீதரன் எம்.பி. காட்டம் | Sritharan Mp Speech Parliament

இந்த அரசு சட்டத்தை மதித்துச் செயற்படுவதாக இருந்தால், ஐ.நா. அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு முறையான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். நீதிக்காகப் பாதிக்கப்பட்ட மக்கள் நீண்டகாலமாக காத்திருப்பது, நீதி பொறிமுறைக்கே முரணானது.

காலம் கடந்து செல்லும் நீதியானது கேள்விக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க முடியாதது. எனவே, இந்த அறிக்கையில் உள்ள விடயங்கள் தொடர்பில் அரசு விசேட கவனம் செலுத்த வேண்டும்.

அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை

அல்லைப்பிட்டிச் சம்பவம்

அதேநேரம், தற்போதைய சூழலிலும் மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. யாழ்ப்பாணம் - அல்லைப்பிட்டிப் பகுதியில் கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் உயிரிழந்தார்.

ஐ.நாவின் பாலியல் வன்முறை அறிக்கை - அநுர அரசாங்கம் மௌனம் காப்பது ஏன்! சிறீதரன் எம்.பி. காட்டம் | Sritharan Mp Speech Parliament

அந்த சிறுவனின் உறவினர்கள் நீதி கோரிப் போராடி வரும் நிலையிலும், இதுவரை அந்தச் சம்பவத்திற்கு முறையான நீதி கிடைக்கவில்லை." - என்றார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US