தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி. முக்கிய சந்திப்பு

Parliament of Sri Lanka S. Sritharan Tamil nadu BJP
By Rakesh Jun 20, 2026 11:58 PM GMT
Report

மூன்று நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையிலான குழுவினரை  நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது நேற்றுமுன்தினம்(19.06.2026) இடம்பெற்றுள்ளது.

சுரேஷ் சலே - கோட்டாபயவின் இரகசிய முகாமில் சிக்கிய தமிழ் பெண்ணின் வாக்குமூலம்

சுரேஷ் சலே - கோட்டாபயவின் இரகசிய முகாமில் சிக்கிய தமிழ் பெண்ணின் வாக்குமூலம்

தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதி

இச்சந்திப்பின் போது, ஈழத் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வரும் சமகால அரசியல் சவால்கள் மற்றும் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி. முக்கிய சந்திப்பு | Sritharan Mp S Important Meeting Tamil Nadu Bjp

தாயகத்தில் தமிழர்களின் பூர்வீக இந்து ஆலயங்கள் இடிக்கப்பட்டு, அவ்விடங்களில் திட்டமிட்ட முறையில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றமை குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கொண்டு சென்றார். 

அத்துடன், யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் தற்போது தோண்டப்பட்டு வரும் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட விவகாரங்களைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்கான நீதியை சர்வதேச மட்டத்தில் நிலைநாட்டுவதன் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்கள்

ஈழத் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வு மற்றும் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகள் தொடர்பிலும் இருதரப்பிற்கும் இடையில் இதன்போது ஆழமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

தமிழக பா.ஜ.க. தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி. முக்கிய சந்திப்பு | Sritharan Mp S Important Meeting Tamil Nadu Bjp

இத்தகைய அரசியல் சந்திப்புகளையும் ஆலோசனைகளையும் இருதரப்பிற்கும் இடையில் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வது குறித்து இணக்கம் காணப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினருக்கு மதிய உணவு உபசரிப்பும் வழங்கப்பட்டது.

இந்த உயர்மட்டச் சந்திப்பில், தமிழ் மக்களின் அரசியல் விவகாரங்களில் 50 ஆண்டுகால நீண்ட அனுபவமிக்க மூத்த தலைவரான கே. எஸ். ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் : மீண்டும் தொடங்கவுள்ள பேச்சுவார்த்தை

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் : மீண்டும் தொடங்கவுள்ள பேச்சுவார்த்தை

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின் 33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

போக்குவரத்து சட்ட விதிகளை மீறியவர்களின் 33 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US