தமிழ்த்தேசிய இனம் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும்: சிறீதரன் எம்.பி வலியுறுத்து
தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்(S. Shritharan) தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலுள்ள(Kilinochchi) அவரது கட்சி அலுவலகத்தில் இன்று(29.05.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எமது இனத்திற்கு இது ஒரு சாபக்கேடு
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“தமிழர்களுக்கு என ஒரு தனித்துவமான இனம், அவர்களுக்கே உரித்தான மொழி, வணக்க பண்பாட்டு முறைகள் உள்ளன.
ஆனால், இலங்கை அரசு, இங்குள்ள படைகள் மூலம், சிங்கள அடையாளங்களையும் சிங்கள பண்பாட்டு முறைகளையும் தமிழர் பிரதேசத்திற்குள் திணிக்க முயல்கின்றது.
எமது இனத்திற்கு இது ஒரு சாபக்கேடு என்பதுடன், நாம் போராடுகின்ற இனமாக இருந்தால் சில விடயங்களை எதிர்க்க வேண்டும்.
அத்துடன், நாங்களும் சில விடயங்களை போராட்டம் மற்றும் செயற்பாடுகள் மூலமே முன்னெடுக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri