கல்முனையில் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட உணவகங்கள்
கல்முனை (Kalmunai), அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீனின் அறிவுறுத்தலுக்கமைய, உணவுப் பாதுகாப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி ஏ.எஸ்.எம்.பெளசாத் பங்களிப்புடன் குறித்த சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டுள்ளன.
சட்ட நடவடிக்கை
மேலும், 65 உணவு கையாளும் நிறுவனங்கள் இதன்போது சோதனை செய்யப்பட்டு அதில் 8 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வர்த்தகர்கள் மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
