கேவில் பிறீமியர் லீக் இறுதி போட்டியில் சிவஞானம் சிறீதரன் பங்கேற்பு
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கேவில் வெள்ளி நிலா விளையாட்டுக் கழகம் நடாத்திய கேவில் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) பங்கேற்றுள்ளார்.
குறித்த போட்டி இன்று (21.06.2024) மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புதிய விளையாட்டரங்கு
அதனையடுத்து, சிவஞானம் சிறீதரனின் இந்த ஆண்டுக்குரிய பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெள்ளி நிலா விளையாட்டு கழகத்திற்கு புதிதாக அமைத்து கொடுக்கப்பட்ட விளையாட்டரங்கு நாடாவெட்டி திறக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாணய சுழற்சியோடு இறுதி போட்டியையும் சிவஞானம் சிறீதரன் ஆரம்பித்து வைத்துள்ளார்.
மேலும், இந்தத் தொடரின் வெற்றிக் கிண்ணத்தை கேவில் வொரியஸ் அணியினர் தட்டிச் சென்றதுடன் அவர்களுக்கு இருபதாயிரம் ரூபாய் பணப் பரிசும் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |