கோட்டாபயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டமை போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் : சிறிதரன் (Video)

Sri Lankan Tamils Gotabaya Rajapaksa Ranil Wickremesinghe S. Sritharan Sri Lanka Politician
By Erimalai Mar 27, 2023 05:21 PM GMT
Report

கச்சதீவு உள்ளிட்ட இடங்களில் புத்தர் குடியேற்றி இடம்பிடிக்கின்ற நிலையில், கோட்டாபயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டது போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,


நீதிமன்றம் கட்டளை

தமிழ் மக்களுடைய வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மிக முக்கியமான வவுனியா - நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெடுக்குநாறி எனும் பகுதியிலே நீண்ட நெடுங்காலமாக வரலாற்று ரீதியிலே சைவத்தமிழ் பாரம்பரியத்தோடு ஆதி சிவனை வழிபட்டு வந்த மூதாதையரும் அந்த பரம்பரையும் அந்த மண்ணில் இருக்கின்றார்கள்.

அவ்வாறான வெடுக்குநாறி சிவனாலயமும், அந்த சிவனாலயத்தின் பரிபாலய தெய்வங்களான அம்மன், பிள்ளையார், வைரவர் போன்ற கடவுள்களுடைய சிலைகளும் அடித்து உடைத்து சிதைக்கப்பட்ட விடயத்தை நாங்கள் நேற்று பார்க்க கிடைத்தது.

மிக முக்கியமாக வெடுக்குநாறி மலை என்பது தொல்பொருளிற்குரியதென்றும், அங்கு யாரும் பிரவேசிக்க வேண்டாம் என நீதிமன்றம் கட்டளையிட்டதற்கு அமைவாக அந்த ஆலயத்தை பூசித்தும், பராமரித்தும் வந்த பூபால் ஐயாவும், ஏனைய பூசகர்களும் அந்த இடத்திற்கு செல்ல முடியாமல் அவர்கள் வேதனைப்பட்டுக்கொண்டு நீதிமன்ற கட்டளையை மதித்து நடந்தார்கள்.

அவர்கள் மீதுதான் பிக்குமாரும், தொல்பொருள் திணைக்களமும் அவ்விடத்தை சேதப்படுத்தியதாக வழக்கு தாக்கல் செய்திருந்தார்கள்.

கோட்டாபயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டமை போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் : சிறிதரன் (Video) | Sritharan About Kachchathivu Buddhist Temple Issue

அதையெல்லாம் தாண்டி நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளித்து அவர்கள் அந்த இடத்திற்கு செல்லாது இருந்த பொழுது, அந்த இடத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு தரப்பினர் அவ்விடத்திலிருந்த ஆதிசிவனுடைய சிவலிங்கத்தையும், அம்மன், பிள்ளையார், வைரவர், முருகன் சிலைகளையும் சிதைத்து தூக்கி எறிந்திருக்கிறார்கள்.

குருந்தூர் மலையில்  விகாரை கட்டக் கூடாது

இது இந்த நாட்டில் மிகவும் கேவலமான செயல். தாங்கள் செய்த கர்மம் என்பது கோட்டாபயவின் காலத்தில் அவருக்கு வெளிப்பட்டிருந்தது.

அதனைத்தாண்டி மீண்டும் ரணில் விக்ரமசிங்கவில் காலத்திலும் கரும வினைகளை அவர்கள் சந்திக்கப்போகின்றார்கள்.

இது தெய்வ அனுகிரகத்திற்குட்பட்ட விடயம். ஏற்கனவே குருந்தூர் மலையில் ஒரு விகாரையை கட்டக் கூடாது என முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கின்றது.

இலங்கையில் நீதிமன்றத்தின் நியாய ஆதிக்கங்கள் மீறப்பட்டு, நீதிமன்றம் அவமதிக்கப்பட்டு அங்கு புத்த விகாரை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

விகாரையிலே வைக்கப்பட்டுள்ள தூபி ஒரு சிவலிங்கமாகும். அவ்வாறு குருந்தூர் மலையில் கட்டவேண்டாம் என்ற விடயத்திற்கு மாறாக கட்டியிருக்கின்றார்கள்.

கோட்டாபயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டமை போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் : சிறிதரன் (Video) | Sritharan About Kachchathivu Buddhist Temple Issue

வன்மையாக கண்டிக்கிறோம்

வெடுக்குநாறி மலையில் இருந்த சிவனாலயம் இருக்கட்டும் எனவும், இரு தரப்பினரும் அங்கு செல்ல வேண்டாம் எனவும் கட்டளையிடப்பட்டிருந்த நிலையில், இன்று அங்கிருந்த விக்கிரங்கள் உடைத்தெறியப்பட்டிருக்கிறதென்றால் மிக மோசமான காரியம்.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையினுடைய ஆட்சியாளர்கள் எங்கெங்கு பௌத்தங்களை வைக்க முடியுமோ வைத்து, அந்த இடங்களை ஆக்கிரமிக்க மிகக் கடுமையாக ஈடுபடுகின்றார்கள் என்பதை மிகத்துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது.

மிக முக்கியமாக அண்மையிலே, கச்சதீவில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நெடுந்தீவு பங்குத்தந்தையாக இருக்கின்ற தந்தை வசந்தன் நேரடியாக கச்சதீவில் புத்தர் சிலை எழுப்பப்பட்டிருப்பதை நேரடியாக கண்டிருக்கி்றார்.

இம்முறை 40 பிக்குமார்கள் கச்சதீவுக்கு சென்றிருக்கின்றார்கள். கச்சதீவு என்பது வடக்கு மகாணத்தில் யாழ்ப்பாணத்தோடு சேர்ந்த ஒரு தொகுதி.

கோட்டாபயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டமை போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் : சிறிதரன் (Video) | Sritharan About Kachchathivu Buddhist Temple Issue

அங்கு இந்தியாவின் தமிழ்நாட்டை சேர்ந்த மக்களும் வருவார்கள். இலங்கையில் இருக்கின்ற மக்களும் செல்வார்கள். அப்படியான இடங்களிலும் புத்தர் குடியேறி இடம்பிடிக்கின்ற செயற்பாட்டில் ஈடுபடுகின்றார்.

குருந்தூர் மலையில் புத்தர் சிலை இருப்பதாக குறிப்பிட்டு இன்று 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை பறிப்பதற்கான செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

இன்று காட்டுக்குள் இருக்கின்ற, கால காலமாக பொங்கல் செய்து வழிபட்டுக்கொண்டிருக்கின்ற ஆதிசிவன் ஆலயத்தை வெடுக்குநாறி மலையிலிருந்து எறிந்துவிட்டு, அந்த இடத்தில் புத்தர் சிலையை வைத்து அந்த பிரதேசங்களை தங்களுடைய பிரதேசங்களாக மாற்ற முயற்சிக்கின்றார்கள்.

இனவாதத்தின் உச்சம்

இந்த நாட்டில் ஜனாதிபதி, அதற்கு பொறுப்பாக இருக்கின்ற அமைச்சர் உட்பட இனவாதத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதைத்தான் இந்த செயற்பாடுகள் வெளிக்காட்டுகின்றன.

இலங்கையிலே நீதிமன்றங்களால் எதுவும் செய்ய முடியாது.

கோட்டாபயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டமை போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் : சிறிதரன் (Video) | Sritharan About Kachchathivu Buddhist Temple Issue

நீதிமன்றங்கள் அப்பாவிகளையும் அல்லது நீதிமன்றங்களுக்கு எதிராக பேசுபவர்களையும்தான் அடைக்க முடியும் என்ற சட்டம்தான் இன்று இலங்கையிலே செல்லுபடியாகின்றதே தவிர, நீதிமன்றத்தின் ஊடாக இன்று தடுக்கப்பட்ட சட்டங்கள் அல்லது மீறி செயற்படுபவர்களை கைது செய்யவோ அல்லது தடுக்கவோ முடியாமல் இருக்கின்றமை மிக மிக துர்ப்பாக்கியமானது.

அது இலங்கையில் இருக்கின்ற சட்டத்தை கேள்விக்குட்படுத்தியிருக்கின்றது. ஆகவே நாங்கள் தொடர்ந்தும் இந்த விடயத்திற்காக குரல் கொடுப்போம்.

தொடர்ந்தும் ஆதிசிவன் ஆலயம் வெடுக்குநாறி மலையில் இருப்பதற்கான முழுவகையான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கின்றோம்.

கோட்டாபயவின் காலத்து கரும வினைகள் வெளிப்பட்டமை போன்று ரணில் காலத்திலும் வெளிப்படும் : சிறிதரன் (Video) | Sritharan About Kachchathivu Buddhist Temple Issue

இவ்விடயம் தொடர்பில் வரும் வியாழனன்று மிகப்பெரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டும், இவ்விடயம் தொடர்பில் அவர்கள் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளையும் செய்து போராட்டங்களையும் முன்னெடுத்து இந்த உருவச்சிலைகளை இருந்த இடங்களில் மீள வைக்கும் வரை தமிழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஒற்றுமையாக இந்த பணியை செய்ய வேண்டும்.

இதிலே, அரசியல், கருத்து வேறுபாடுகளை ஒருபுறம் வைத்துவிட்டு நாங்கள் சைவத்தமிழர்கள், இந்துத்தமிழர்கள் எல்லோரும் இணைந்து பிடுங்கப்பட்ட சிலைகளை அங்கு கொண்டு சென்று அதனை பிரதிஷ்டை செய்து தொடர்ந்தும் அந்த இடத்தில் வழிபாடுகள் இடம்பெறும் வகையில் எங்களுடைய செயற்பாடுகள் அமைய வேண்டும் என நான் வேண்டி நிற்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US