தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை: சிறிநேசன் ஆதங்கம்
எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
முதலைக்குடா பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சிங்கள இனத்தை சார்ந்தவர்களும் முஸ்லிம் இனத்தை சார்ந்தவர்களும் ஒரு போதும் தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது இல்லை. ஆனால் முத்துலிங்கம் என்ன செய்வார் என்றால் முத்துலிங்கத்திற்கும் வாக்களிப்பார் முஸ்தபாக்கும் வாக்களிப்பார் முத்து பண்டாக்கும் வாக்களிப்பார்.
தமிழர்களின் உரிமை
இந்த நாடு பொதுவாக இனவாத ரீதியாக பிரிந்து இருக்கின்ற நாடு. சமத்துவ அடிப்படையில் சிந்திக்காத ஒரு நாடு. இந்த நாட்டில் தமிழர்கள் தமது உரிமையை பெறவில்லை தரவில்லை.
இவ்வாறு இருக்கின்ற போது எங்களுடைய வாக்குகளை சிதறடிப்பதன் மூலமாக தமிழர்களின் பிரச்சினை தீர்ந்து விட்டது, தென்னிலங்கை சார்ந்த கட்சிகளுக்கு வாக்களித்து விட்டார்கள், நாடாளுமன்ற தேர்தலில் எங்களோடு நின்றார்கள் உள்ளூர் ஆட்சி சபை தேர்தலில் எங்களோடு தான் நிற்கின்றார்கள் என்று அவர்கள் பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் குரல் கொடுப்பதற்கு இந்த தேர்தல் தென்னிலங்கை கட்சிக்கு சாதகமாக அமைந்தால் அது அவர்களுக்கு வாய்ப்பாக அமையும்.
ஒன்று விளங்குகின்றது எந்த சந்தர்ப்பத்திலும் சிங்கள கட்சிகள் அல்லது தென்னிலங்கை கட்சிகள் தமிழ் மக்களுக்கு நியாயம் வழங்குகின்ற கட்சிகளாக இல்லை. எந்த சிங்கள கட்சி வந்து படுகொலைகள் செய்தாலும் அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.




தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
