இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள்! இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை - சிறிநாத் எம்.பி வெளியிட்டுள்ள தகவல்

Sri Lankan Tamils Tamils Batticaloa
By Bavan Nov 04, 2026 06:16 AM GMT
Report

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பல விடயங்களை இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை இந்திய அரசாங்கம் செய்வதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் (02.11.2026) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரம் இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் புதுடெல்லிக்கு விஜயம் செய்து அங்குள்ள பல்வேறு அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். தமிழின சுத்திகரிப்பு அதே போன்று காஷ்மீரில் நடைபெற்ற இனசுத்திகரிப்பு தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒப்பீடு தொடர்பான ஆய்வு மாநாட்டில் பிரதான பேச்சாளராகப் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

சந்திப்பு

என்னுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஜக்கிய அமெரிக்க தமிழ் செயற்குழு அமைப்பின் செயலாளர் லவன் கலந்துகொண்டனர். இதன்போது தமிழக அரசின் சமூக நலத்துறை அமைச்சர் வன்னி அரசு பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் நாட்டுக்குரிய இளைஞர் அணி தலைவர் சூர்யா, பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக்கு பொறுப்பான செயலாளர் டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை சந்தித்தோம்.

அத்தோடு பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பொது செயலாளர் ஏ.பி. சந்தித்தித்தோம். இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. அரசியல் தீர்வு முயற்சிகளில் காணப்படும் இழுத்தடிப்புகள், காணிப் பிரச்சினைகள், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக ஆலயங்களுக்கு ஏற்படுத்தப்படும் நெருக்கடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அவர்களிடம் எடுத்துரைத்தோம்.

அதுபோல் சமகாலத்தில் பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படுகின்றது என்ற போர்வையிலே அரசாங்கத்தை பயங்கரவாதத்தில் இருந்து காப்பாற்றுகின்ற சட்டம் என்ற போர்வையில் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டம் தொடர்பிலும் நாம் தெளிவாக எடுத்துரைத்திருந்தோம்.

அதேவேளை தொல்பொருள் என்ற போர்வையிலேயே ஆலயங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகள் குறிப்பாக திருகோணமலையில் சிவன் ஆலயத்திலே தொல்பொருள் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பணிகள் இதனால் பாதிக்கப்படும். ஆன்மீகத் தன்மை, தொல்பொருள் திணைக்களத்தின் சட்ட நுணுக்கத்தின் ஊடாக பல செயற்றிடங்கள் முன்னெடுக்கப்பட்டுவதோடு பௌத்த விகாரைகள் அமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள்! இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை - சிறிநாத் எம்.பி வெளியிட்டுள்ள தகவல் | Srinath Mp Statement About Tamils

தமிழ் மக்களுக்கு எதிரான விடயங்கள்

இலங்கையிலே புதிய அரசு அமையப்பெற்றுள்ள போதிலும், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு இரண்டு ஆண்டுகளாக எந்த விதமான முன்னெடுப்புகளும் நடைபெறவில்லை. இந்தியாவால் அறிமுகப்படுத் தப்பட்டிருந்த 13 வது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபை தேர்தல்கூட நிச்சயமற்ற தன்மை இருக்கின்றது. என தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெறும் விடயங்களை மிகவும் விரிவாக எடுத்துரைத்துதோடு இதனை உன்னிப்பாக இந்திய நிதியமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.

இவ்விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு தமது கருத்துக்களை தெரிவித்திருப்பதாகவும் ஆலயங்கள் தொடர்பில் தமது கருத்துக்களை தெரிவிப்பதாகவும், இலங்கை தமிழர்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் இது தொடர்பில் எடுத்துரைப்பதாகவும் இந்திய நிதியமைச்சர் உறுதியளித்தார்.; இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியாவினுடைய ஈடுபாட்டை நாம் கோரியிருந்தோம்.

அதுபோல் இந்தியாவின் உதவியுடன் வடகிழக்கிலேயே அபிவிருத்தி திட்டங்கள் கட்டுமானங்களை மீண்டும் செய்ய வேண்டும் என்பதையும் நாம் எடுத்துரைத்ததோடு, ஏற்கனவே கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் இன்னும் அனுமதியின்றி நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பதையும் நாம் அவர்களது கவனத்திற்கு கொண்டு சென்றோம். இராஜதந்திர ரீதியில் தமிழ் மக்களுக்கு நெருக்கடிகள் ஏற்படாத வண்ணம் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான பல விடயங்களை முன்னெடுப்பதற்கான நடைமுறைகளை இந்திய அரசாங்கம் செய்வதாக இந்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

புதிய அரசு பல விடயங்களை நாடு ரீதியாக முன்னெடுத்திருந்தாலும்கூட வடகிழக்குலே மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமானங்கள் பொருளாதார நடவடிக்கைகள் மாகாண சபை தேர்தல் அரசியல் தீர்வு போன்ற பல விடயங்கள் செய்யப்படாமல் இருப்பது போன்ற விடயங்கள் உதவியை எதிர்பார்ப்பினை வெளிக்காட்டி இருந்தோம். இந்நிலையில் இந்தியாவிலே வசித்து வருகின்ற இலங்கை அகதிகள் தொடர்பில் நாம் எடுத்துரைத்திருந்தோம்.

அவர்கள் மீண்டும் இலங்கை திரும்புவதற்கு விரும்பினால் அவர்களுக்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய முயற்சிகள் செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு இலங்கை வரவிரும்பாமல் உள்ள அகதிகளை இந்திய நிரந்தர குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும் என்றும் வலியுறுத்தினோம் என தெரிவித்துள்ளார்.

பரிதாப நிலையில் மகிந்த - ஷிரந்தி : வீடு செல்ல முடியாமல் தவிக்கும் நாமல்

பரிதாப நிலையில் மகிந்த - ஷிரந்தி : வீடு செல்ல முடியாமல் தவிக்கும் நாமல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 90 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 90 இலட்சம் ரூபா பெறுமதியான கடல் அட்டைகள் பறிமுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US